தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 : ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 : ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
x

Image Tweet :cricket.com.au

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது

முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்றிரவு நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

தென் ஆப்பிரிக்கா அணி:

டெம்பா பவுமா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், டெவால்ட் ப்ரெவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் , ஜார்ன் போர்டுயின், ஜெரால்ட் கோட்ஸி, லுங்கி என்கிடி, லிசாட் வில்லியம்ஸ், ஷம்சி

ஆஸ்திரேலியா அணி:

டிராவிஸ் ஹெட், மாட் ஷார்ட், மிட்செல் மார்ஷ் , ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், ஆரோன் ஹார்டி, சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, ஜேசன் பெஹ்ரெண்டோர்ப்


Next Story