2வது டெஸ்ட் : வெற்றி பயணத்தை தொடருமா இந்தியா ? - ஆஸ்திரேலியா அணியுடன் நாளை மோதல்
இரு அணிகள் இடையேயான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
புதுடெல்லி,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. நாக்பூர் போட்டியை போலவே இந்த டெஸ்டிலும் இந்தியாவின் அதிரடி தொடருமா? என்று ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது
கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடும் நெருக்கடியில் உள்ளது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 104-வது டெஸ்டாகும். இதுவரை நடந்த 103 போட்டியில் இந்தியா 31-ல், ஆஸ்திரேலியா 43-ல் வெற்றி பெற்றன. 28 டெஸ்ட் 'டிரா' ஆனது. ஒரு போட்டி 'டை'யில் முடிந்தது. நாளைய டெஸ்ட் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.