3-வது 20 ஓவர் கிரிக்கெட்; இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் நாளை மோதல்!


3-வது 20 ஓவர் கிரிக்கெட்; இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் நாளை மோதல்!
x

image courtesy; twitter/ @BCCI

தினத்தந்தி 27 Nov 2023 5:11 PM IST (Updated: 27 Nov 2023 5:43 PM IST)
t-max-icont-min-icon

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

கவுகாத்தி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஆட்டம் கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நாளை நடைபெற உள்ளது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்பதால் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் தொடரை இழக்கக்கூடாது என்பதில் ஆஸ்திரேலிய அணியினர் வரிந்து கட்டி நிற்பர். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த ஆட்டம் நாளை இரவு 7 மணியளவில் நடைபெற உள்ளது.


Next Story