இந்தியா - அயர்லாந்து இடையிலான 3-வது டி20 போட்டி மழையால் ரத்து.,!
இதனால் 2-0 என இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
டப்ளின்,
20 ஓவர் கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றது. இதில் மழையால் பாதியில் நிறுத்தப்பட்ட முதல் ஆட்டத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி 2 ரன் வித்தியாசத்தில வெற்றி பெற்ற இந்தியா, 2-வது ஆட்டத்தில் 33 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை தோற்கடித்தது.
இந்தியா- அயர்லாந்து மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி டப்ளினில் இன்று நடைபெற இருந்தது. இந்த நிலையில் போட்டி நடைபெறும் பகுதியில் தொடர் மழை பெய்தது. சில மணி நேரமாகியும் மழை தொடர்ந்ததால் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டது.
இதனால் 2-0 என இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
Related Tags :
Next Story