இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் : முதல் நாளில் நியூசிலாந்து அணி 225 ரன்கள் சேர்ப்பு


இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் : முதல் நாளில் நியூசிலாந்து அணி 225 ரன்கள் சேர்ப்பு
x

முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது.

லீட்ஸ்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.

இந்த நிலையில் லீட்சில் நேற்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. டேரில் மிட்செல் 78 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல் 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முன்னதாக கேப்டன் கேன் வில்லியம்சன் 31 ரன்களிலும், துணை கேப்டன் டாம் லாதம் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.


Next Story