4வது ஆஷஸ் டெஸ்ட்; ஆஸ்திரேலியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஆஸி. முன்னாள் வீரர்..!


4வது ஆஷஸ் டெஸ்ட்; ஆஸ்திரேலியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஆஸி. முன்னாள் வீரர்..!
x

Image Courtesy: @ICC

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 4வது ஆஷஸ் டெஸ்ட் வரும் 19ம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.

மான்செஸ்டர்,

5 போட்டிகள் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது. இந்நிலையில் 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தேர்வு செய்துள்ளார்.

அந்த அணியில் ரன் எடுக்க முடியாமல் திணறி வரும் டேவிட் வார்னருக்கு வாய்ப்பு அளித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங் தேர்வு செய்துள்ள அணி:-

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சாக்னே, ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), டாட் மர்பி, ஜோஷ் ஹேசில்வுட்.




Next Story