4 ஆவது டி20: வெஸ்ட் இண்டீசுக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா


4 ஆவது டி20: வெஸ்ட் இண்டீசுக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
x

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது.

புளோரிடா,

இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சென்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றியது.

இந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

இதனை தொடர்ந்து 4 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் விளையாடியது.

அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும் (33), சூர்யகுமார் யாதவும் (24) சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அடுத்து வந்த தீபக் ஹூடா 21 ரன்களும், ரிஷப் பண்ட் 44 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். சஞ்சு சாம்சன் 30 ரன்களும், கடைசியில் அக்சர் படேல் அதிரடியுடன் 20 ரன்களையும் எடுத்தனர்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.


Next Story