ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ. 8.40 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இந்திய இளம் வீரர்..!
2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் இன்று நடைபெற்று வருகிறது.
துபாய்,
Live Updates
- 19 Dec 2023 5:48 PM IST
இந்திய வீரர் ரமன்தீப் சிங்கை ரூ. 20 லட்சத்திற்கு கொல்கத்தா அணி வாங்கியுள்ளது.
- 19 Dec 2023 5:44 PM IST
இந்தியாவை சேர்ந்த இளம் வீரர்களான அங்கிரிஷ் ரகுவன்ஷியை கொல்கத்தா அணியும், அர்ஷின் குல்கர்னியை லக்னோ அணியும் அடிப்படை விலைக்கே ஏலம் எடுத்தன.
- 19 Dec 2023 5:39 PM IST
இந்தியாவை சேர்ந்த இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடி அனுபவம் பெறாத இளம் வீரர் சமீர் ரிஸ்வியை ஏலத்தில் எடுக்க அணிகள் போட்டி போட்டன. இறுதியில் சென்னை அணி அவரை ரூ.8.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
- 19 Dec 2023 5:28 PM IST
உள்ளூர் போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்ற இந்தியாவை சேர்ந்த சுபம் துபே ராஜஸ்தான் அணியால் ரூ.5.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
- 19 Dec 2023 4:06 PM IST
ஜோஷ் ஹேசில்வுட், முஜீப் ரகுமான், தப்ரைஸ் ஷம்சி, சோதி உள்ளிட்ட சில முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுக்க எந்த அணிகளும் முன்வரவில்லை.
- 19 Dec 2023 3:47 PM IST
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கை ஏலத்தில் எடுக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக தொகையாக ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது.
- 19 Dec 2023 3:31 PM IST
இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவியை ரூ. 6.40 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது.
- 19 Dec 2023 3:26 PM IST
இந்திய வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவை ரூ. 5.80 கோடிக்கு குஜராத் அணி வாங்கியது.