இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிருந்து விலகும் முக்கிய வீரர்..!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் .இதனால் அவர் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023ல் இருந்து விலகியுள்ளார்.
இந்த நிலையில் லண்டனில் ஜூன் மாதம் நடக்க இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வெளிநாட்டுக்கு செல்ல உள்ளதாகவும் , இதனால் அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story