ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு


ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு
x

image courtesy; twitter/@ICC

தினத்தந்தி 22 Aug 2023 3:32 PM IST (Updated: 22 Aug 2023 3:34 PM IST)
t-max-icont-min-icon

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

கொழும்பு,

ஆசியக்கோப்பை தொடருக்கு முன்பாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடர் இரண்டு அணிகளுக்கும் பொதுவான ஆடுகளமாக இலங்கையில் வைத்து நடைபெறுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடர் ஆகஸ்டு 22ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி முடிவடைகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் முதலாவது ஒருநாள் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாசை வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்களுடன் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-

ஆப்கானிஸ்தான் : ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), முகமது நபி, இக்ரம் அலிகில், அஸ்மதுல்லா உமர்சாய், ரஷித் கான், அப்துல் ரஹ்மான், முஜீப் உர் ரஹ்மான், பசல்ஹாக் பரூக்கி

பாகிஸ்தான்: பகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான், இப்திகார் அகமது, ஆகா சல்மான், ஷதாப் கான், உசாமா மிர், ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப்


Next Story