காயத்தில் இருந்து மீண்டுவிட்டேன்... ஐபிஎல் தொடருக்கு தயார் - சென்னை வேகப்பந்து வீச்சாளர் உற்சாகம்


காயத்தில் இருந்து மீண்டுவிட்டேன்... ஐபிஎல் தொடருக்கு தயார் - சென்னை வேகப்பந்து வீச்சாளர் உற்சாகம்
x

காயத்தால் அவதிப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அணி வீரர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.

டெல்லி,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர். இவரை 14 கோடி ரூபாய்க்கு கடந்த ஆண்டு சென்னை அணி ஏலம் எடுத்தது. ஆனால், காயம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தீபக் சாஹர் விளையாடவில்லை.

அதேபோல் காயம் காரணமாக கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரிலும் தீபக் சாஹர் இடம்பெறவில்லை.

காயத்தால் அவதிப்பட்டுவந்த தீபக் சாஹர் சிகிச்சைக்கு பின் தற்போது குணமடைந்துள்ளார். மேலும், அவர் முழு உடல் தகுதி பெற்றுள்ளார்.

இந்நிலையில், 2 பெரிய காயத்தில் இருந்து மீண்டு முழு உடல்தகுதி பெற்றதால் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று தீபக் சாஹர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், உடல் தகுதிக்காக கடந்த 3 மாதங்களாக கடுமையாக உழைத்துள்ளேன். நான் முழுமையாக உடல்தகுதி பெற்றுவிட்டேன். ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருகிறேன்' என்றார்.

தீபக் சாஹர் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளதால் நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் சென்னை அணிக்காக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story