ஆசிய கோப்பை தொடர்; டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு...!!
வங்காளதேசம்- பாகிஸ்தான் அணிகளுக்கான போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
லாகூர்,
6 அணிகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்ட 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டன. இதில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஒரு பிரிவிலும், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஒரு பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.
இந்த அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்காளதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.
இதையடுத்து ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் முதலாவது சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் அந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. டாஸில் வென்ற வங்காளதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. வங்காளதேச அணியில் ஒரே மாற்றமாக ஷண்டோவிற்கு பதிலாக லிட்டன் தாஸ் இடம்பிடித்துள்ளார்.
இரு அணிகளுக்கன பிளேயிங் 11 பின்வருமாறு;-
பாகிஸ்தான்: பகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், பஹீம் அஷ்ரப், ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப்
வங்காளதேசம்: முகமது நைம், மெஹிதி ஹசன் மிராஸ், லிட்டன் தாஸ், தௌஹித் ஹிரிடோய், ஷாகிப் அல் ஹசன்(கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், ஷமிம் ஹொசைன், அபிப் ஹொசைன், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத்