ஆசிய கோப்பை: இலங்கை - வங்காளதேசம் அணிகள் நாளை மோதல்
சூப்பர்-4 சுற்றில் நாளை நடக்கும் ஆட்டத்தில் இலங்கை-வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கொழும்பு,
ஆசிய கோப்பை தொடரில் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு சென்றுள்ளன. இதையடுத்து நடைபெற்ற சூப்பர்-4 சுற்றின் தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் முதல் வெற்றியை பதிவு செய்தது.
சூப்பர்-4 சுற்றில் நாளை நடக்கும் ஆட்டத்தில் இலங்கை-வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இலங்கை அணி, லீக் சுற்றில் தான் மோதிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. ஏற்கனவே வங்காளதேசத்தை வீழ்த்தியுள்ளதால் நம்பிக்கையுடன் களம் இறங்கும் .
வங்காளதேசம் அணி சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்துள்ளது. இதனால் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தோல்வி அடைந்தால் அந்த அணிக்கு கடும் பின்னடைவு ஏற்படும். இந்த ஆட்டம் நாளை மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இதில் மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.