ஆஸ்திரேலியா -இலங்கை முதலாவது டெஸ்ட்: இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது


ஆஸ்திரேலியா -இலங்கை முதலாவது டெஸ்ட்: இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி முதல் நாளில் இலங்கை அணி 212 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

காலே,

இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் காலேயில் நேற்று தொடங்கியது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இலங்கை அணி உள்ளூர் சூழலிலும் தடுமாறியது. 97 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்த நிலையில் மேத்யூசும் (39 ரன்), விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லாவும் (58 ரன்) ஓரளவு தாக்குப்பிடித்து அணி 200 ரன்களை கடக்க உதவினர்.

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 59 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அவர் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்துவது இது 20-வது முறையாகும்.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் வார்னர் 25 ரன்னிலும், மார்னஸ் லபுஸ்சேன் 13 ரன்னிலும், ஸ்டீவன் சுமித் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். உஸ்மான் கவாஜா (47 ரன்), டிராவிஸ் ஹெட் (6 ரன்) களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Next Story