அஸ்வின் - அக்சர் படேல் கீழ்வரிசை பேட்ஸ்மேன்கள் அல்ல - ஆஸ்.வீரர் புகழாரம்


அஸ்வின் - அக்சர் படேல் கீழ்வரிசை பேட்ஸ்மேன்கள் அல்ல - ஆஸ்.வீரர் புகழாரம்
x
தினத்தந்தி 18 Feb 2023 8:35 PM IST (Updated: 18 Feb 2023 9:28 PM IST)
t-max-icont-min-icon

எந்த டெஸ்ட் அணியிலும் முதல் 6 இடங்களுக்குள் அஸ்வின் - அக்சரால் பேட்டிங் செய்ய முடியும் என்று ஆஸ்திரேலிய வீரர் தெரிவித்தார்.

டெல்லி,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றிபெற்றது.

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் நிறைவடதற்குள் 263 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடியது.

ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணி 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

139 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறிய இந்திய அணியை அஸ்வின் - அக்சர் படேல் ஜோடி மீட்டது. இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அஸ்வின் 37 ரன்களுக்கும், அக்சர் 74 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அஸ்வின் - அக்சர் ஜோடியின் ஆட்டம் இந்தியாவை சரிவில் இருந்து மீட்டது.

இந்தியா முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா இந்தியாவை விட 62 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

2-ம் நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அஸ்வின் - அக்சர் படேலை புகழ்ந்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், அஸ்வின் - அக்சர் படேல் கீழ் வரிசை வீரர்கள் அல்ல... அதை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். உலகின் எந்த டெஸ்ட் அணியிலும் மேல் வரிசையில் முதல் 6 இடங்களுக்குள் அஸ்வின் - அக்சரால் பேட்டிங் செய்ய முடியும். இந்தியா மிகவும் நீளமான மேல்வரிசை பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளது என்பதை கூறிக்கொள்கிறேன்' என்றார்.


Next Story