உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பேக் அப் விக்கெட் கீப்பர் தேவை இல்லை - இந்திய முன்னாள் வீரர்


உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பேக் அப் விக்கெட் கீப்பர் தேவை இல்லை - இந்திய முன்னாள் வீரர்
x

Image Courtesy: AFP

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பேக் அப் விக்கெட் கீப்பர் தேவை இல்லை என இந்திய முன்னாள் வீரர் சந்தீப் பாட்டீல் கூறியுள்ளார்.

மும்பை,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது உலகக்கோப்பை அணியை தேர்வு செய்து அறிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் சந்தீப் பாட்டீல் உலகக்கோப்பை தொடருக்கான அணியில் பேக்-அப் விக்கெட் கீப்பர் தேவையில்லை என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,

இந்திய அணியில் திலக் வர்மாவுக்கு விரைவில் அறிமுக வாய்ப்பை கொடுப்பது 100% சரியாக இருக்கும். இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தேர்வு செய்வேன். அதில் யார் விளையாடும் 11 பேர் அணியில் இடம் பிடிப்பார்கள் என்பதை எதிரணியை பார்த்து விட்டு முடிவு செய்து கொள்ளலாம்.

மிடில் ஆர்டரில் இரண்டு பேரும் பிளேயிங் லெவனில் இடம் பிடித்தால் உலகக்கோப்பை அணியில் பேக்-அப் விக்கெட் கீப்பர் தேவையில்லை என்று நான் கருதுகிறேன்.

இத்தொடர் நம்முடைய சொந்த மண்ணில் நடைபெறுகிறது. அதனால் ஒருவேளை இஷான் கிஷான் காயமடைந்தால் நம்மால் ஒரே நாள் இரவில் சஞ்சு சாம்சன் போன்றவரை தேர்வு செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story