பகார் ஜமான் சதம்; தொடரை கைப்பற்ற நியூசிலாந்துக்கு 281 ரன் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்...!
பாகிஸ்தான் தரப்பில் தொடக்க ஆட்டக்காரர் பக்கார் ஜமான் சதம் அடித்து அசத்தினார்.
கராச்சி,
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடர் 0-0 என்ற கணக்கில் டிரா ஆனது.
இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2வது போட்டியில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன. இந்நிலையில், தொடரி யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இந்தப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பக்கார் ஜமான், ஷான் மசூத் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஷான் மசூத் 0 ரன்னிலும், அடுத்து வந்த கேப்டன் பாபர் ஆசம் 4 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து முகமது ரிஸ்வான் பக்கார் ஜமானுடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அருமையாக ஆடி அணிய்ன் ஸ்கோரை உயர்த்தியது. பொறுமையாக ஆடிய பக்கார் ஜமான் சதம் அடித்த நிலையில் 101 ரன்னில் அவுட் ஆனார். அவருடன் நிதான ஆட்டத்தை கடைப்பிடித்த ரிஸ்வான் 77 ரன்னிலும், அடுத்து வந்த ஹாரிஸ் சோஹைல் 22 ரன்னிலும் அவுட் ஆகினர்.
அடுத்த வந்த ஆஹா சல்மான்45 ரன்னிலும், முகமது நவாஸ் 8 ரன்னிலும், உசாமா மிர் 6 ரன்னிலும், முகமது வாசிம் ஜூனியர் 7 ர ந்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் பக்கார் ஜமான் 101 ரன்னும், ரிஸ்வான் 77 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து தரப்பில் சவுதி 3 விக்கெட்டும், பெர்குசன் 2 விக்கெட்டும், பிரேஸ்வெல், ஷோதி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி மட்டுமல்லாமல் தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில் நியூசிலாந்து ஆட உள்ளது.