200-க்கும் மேல் ரன்களை குவித்தும் அதிகமுறை தோல்வியடைந்த பெங்களூரு அணி
200-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து அதிகமுறை தோற்ற அணி என்ற மோசமான சாதனையை பெங்களூர் அணி படைத்துள்ளது
ஐபிஎல் தொடரோட 15-வது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பெங்களூர் அணி பாப், விராட் கோலி, மேக்ஸ்வெல் ஆகியோரின் அதிரடியால் 212 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கை துரத்திய லக்னோ அணியின் தொடக்கம் சுமாராகவே இருந்தது.
பின்னர் அதிரடி காட்டிய ஸ்டோய்னிஸ் மற்றும் பூரன் ஆகியோரால் லக்னோ அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. இந்நிலையில் 200-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து அதிகமுறை தோற்ற அணி என்ற மோசமான சாதனையை பெங்களூர் அணி படைத்துள்ளது. வேறு எந்த ஒரு அணியும் ஐ.பி.எல் தொடரில் ஐந்து முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து தோல்வியை சந்தித்ததே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story