சென்னை-லக்னோ ஆட்டம்: மழை காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதம்...!


சென்னை-லக்னோ ஆட்டம்: மழை காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதம்...!
x

Image Courtesy: @IPL

தினத்தந்தி 3 May 2023 3:07 PM IST (Updated: 3 May 2023 3:39 PM IST)
t-max-icont-min-icon

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை - லக்னோ அணிகள் மோத உள்ளன.

லக்னோ,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்குகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

இந்த சீசனில் முன்பு எப்போதும் இல்லாததை விட பெரும்பாலான ஆட்டங்களின் முடிவுகள் மிகவும் நெருக்கமாக அமைவதால் டாப்-4 இடங்களை பிடிப்பது யார் என்பதை கணிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. குறைந்தது 9 வெற்றி பெற்றால் தான் சிக்கலின்றி 'பிளே-ஆப்' சுற்றை அடைய முடியும்.

இந்நிலையில் தொடரின் இன்றைய நாளில் 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


v



Next Story