உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்திற்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்றய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
அகமதாபாத்,
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்து அணிகளும் மோதி வருகின்றன. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் முறையே 15 மற்றும் 11 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் களம் இறங்கிய ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுசேன் இருவரும் நிதானமாக ஆடினார். இதில் நன்றாக ஆடிய ஸ்மித் 44 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
பின்னர் அரை சதம் கடந்த மார்னஸ் லாபுசேன் மார்க் வுட் பந்தில் எல்.பி.டபுள்யு ஆனார். பின்னர் கேமரூன் கிரீன் சிறிது நேரம் நிதானமாக விளையாடி 47 ரன்கள் சேர்த்தார். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகின்றது.