ஆஷஸ் டெஸ்ட்: 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி. 4 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் சேர்ப்பு
ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்துள்ளது.
லீட்ஸ்,
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் 6-ம் தேதி தொடங்கியது.
இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து 26 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடங்கியது. இறுதியில் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்தை விட ஆஸ்திரேலியா 142 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஆட்டத்தில் இன்னும் 3 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளது.