பெண்கள் பிரீமியர் லீக் சாம்பியன் யார்?: டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு
பெண்கள் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஐ.பி.எல். போட்டியை போலவே பெண்களுக்கான பிரீமியர் லீக் போட்டி அறிமுகம் செய்தது. முதலாவது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டி மும்பையில் கடந்த 4-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில், பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பையில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
வீராங்கனைகள் விவரம்:
டெல்லி:
மெக் லேனிங் (கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெமிஹா ரொட்ரிங்ஸ், மரிஷினி கெப், அலிஸ் கெப்சி, ஜூஸ் ஜெசன், அருந்ததி, தனியா படியா, மினு மனி, ராதா, ஷிகா பாண்டே
மும்பை:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), யஸ்டிகா பாட்யா, ஹைய்லி மேதிவ்யூஸ், நட் ஷிவர்-பர்ண்ட், மிலெய் கீர், பூஜா வாஸ்டகர், இசி வாங், அமொஜத் கவுர், ஹுமாரியா காசி, ஜிந்திமனி கலிடா, சிகா இஷாகியூ.