டிஎன்பிஎல்: நெல்லை அணிக்கு 131 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திண்டுக்கல் டிராகன்ஸ்


டிஎன்பிஎல்: நெல்லை அணிக்கு 131 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திண்டுக்கல் டிராகன்ஸ்
x

image tweeted by @DindigulDragons

திண்டுக்கல் அணி 12 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் குவித்துள்ளது.

திண்டுக்கல்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) இரு ஆட்டங்கள் நடக்கின்றன. முதலில் தொடங்கும் 7-வது லீக் ஆட்டத்தில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணி, ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை சந்தித்தது.

பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டியானது மழை காரணமாக ஆட்டநேரம் சிறிதுநேரம் பாதிக்கப்பட்டதால், போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டு உள்ளது. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி திண்டுக்கல் அணி முதலில் களமிறங்கியது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விஷால் வைத்யாவும், கேப்டன் ஹரி நிஷாந்தும் களமிறங்கினர். விஷால் 45 ரன்களும், ஹரி நிஷாந்த் 37 ரன்களும் எடுத்து அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்கவில்லை.

இறுதியில் அந்த அணி 12 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி விளையாட உள்ளது.


Next Story