என்னை அதிகமாக ஓட வைக்காதீர்கள் - சென்னை அணி வீரர்களிடம் தெரிவித்த தோனி


என்னை அதிகமாக  ஓட வைக்காதீர்கள் - சென்னை அணி வீரர்களிடம்  தெரிவித்த தோனி
x

தோனிக்கு முழங்காலில் சமீபத்தில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது,

சென்னை,

நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 55வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக மிச்சேல் மார்ஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது.

டோனி மீதான எதிர் பார்ப்பு ரசிகர்களுக்கு மிகவும் அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு விக்கெட் விழும்போது டோனி களம் இறங்குவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவரோ 8-வது வரிசையில் தான் வருகிறார்.கடைசியில் வந்து சிக்சர்களாய் அடித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார். டோனி முன்னதாக களம் இறங்க வேண்டும் என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்களும் வலியுறுத்தி வருகிறார்கள். நேற்றைய போட்டி வெற்றி பிறகு இந்த கேள்வியை தோனியிடம் முன் வைக்கப்பட்டது.

.தனது பேட்டிங் வரிசையில் மாற்றம் இல்லை என்று அவர் உறுதிபடுத்தினார். இது தொடர்பாக டோனி கூறியதாவது:-

. கிடைக்கும் சொற்ப பந்துகளை பவுண்டரிகளாய் மாற்றுவது தான் எனது வேலையாகும். இதுதான் எங்கள் திட்டம். இதற்கேற்ப மற்ற வீரர்களும் நல்ல வகையில் பங்களிக்கிறார்கள். இந்த திட்டம் இதுவரை நல்ல பலனையே அளித்து வருகிறது. என கூறினார்.

மேலும் இந்த ஐபிஎல் - ஐ பொறுத்தவரை இதுதான் என் வேலை. நான் இதைத்தான் செய்யப் போகிறேன். என்னை அதிகமாக ஓட வைக்காதீர்கள். என்று எனது அணியினரிடமும் கூறிவிட்டேன். அதன்படியே செயல்பட்டு வருகிறேன். என்றார்.

தோனிக்கு முழங்காலில் சமீபத்தில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது, முன்னதாக பயிற்சியாளர் பிளெமிங், "தோனி முழங்கால் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருவதால், கடைசி மூன்று ஓவர்களில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story