மழையால் இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா ஒருநாள் போட்டி பாதியில் கைவிடப்பட்டது


மழையால்  இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா ஒருநாள் போட்டி பாதியில் கைவிடப்பட்டது
x

இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் போட்டி மழையின் காரணமாக பாதியில் கைவிடப்பட்டது

லீட்ஸ்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக்கும், மலனும் களமிறங்கினர். மலன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வான் டர் டசன் 26 ரன்களில் அவுட்டானார்.

இதையடுத்து டி காக்கும், மார்க்ரமும் ரன்குவிப்பில் ஈடுபட்டு வந்தனர். சிறப்பாக விளையாடிய டி காக் 92 ரன்கள் எடுத்து சதத்தை நெருங்கிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென போட்டியின்போது மழை குறுக்கிட்டது.

இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை நின்றதும் ஆட்டம் தொடங்கப்படும் என்ற கூறப்பட்ட நிலையில் மழை விடாமல் தொடர்ந்து பெய்துகொண்டிருந்தது. இதனால், போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக 3 போட்டிகள் கொண்ட தொடரை இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் பகிர்ந்துகொண்டனர்.



Next Story