அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு - இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் அறிவிப்பு


அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு - இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் அறிவிப்பு
x

அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இயான் மோர்கன் அறிவித்துள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மென் இயான் மோர்கன். இவர் தலைமையிலான இங்கிலாந்து அணி 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது.

இயன் மோர்கன் 16 டெஸ்ட்களில் விளையாடி 700 ரன்களும், 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7701 ரன்களும், 115 டி20 போட்டிகளில் விளையாடி 2458 ரன்களும், 83 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2458 ரன்களும் எடுத்துள்ளார்.

இதனிடையே, இயன் மோர்கன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனாலும், ஊள்ளூர் போட்டிகள், பிற லீக் கிரிக்கெட்டுகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இயன் மோர்கன் இன்று அறிவித்தார். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story