இந்திய கிரிக்கெட் அணியை வாழ்த்திய கால்பந்தாட்ட வீரர் தாமஸ் முல்லர்!
உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளன.
மும்பை,
இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோத உள்ளன.
லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. அதேபோல் லீக் சுற்றில் இந்தியாவிடம் தோல்வி கண்ட நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறிய இந்திய அணி இந்த முறை அதற்கு பழிதீர்க்கும் முனைப்புடன் உள்ளது. இதனால் நாளை நடைபெறும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் ஜெர்மன் கால்பந்து நட்சத்திரம் தாமஸ் முல்லருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதில் முல்லரின் பெயரும் 25 என்ற நம்பரும் குறிக்கப்பட்டுள்ளது. அதனை அணிந்து கொண்ட அவர் இந்திய அணிக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
இதனை தனது எக்ஸ் பக்கத்தில்,
"ஜெர்சி வழங்கிய இந்திய அணிக்கு நன்றி. குட் லக்" என பதிவிட்டுள்ளார்.