ரன் அவுட் ஆனதும் பேட்டை காட்டுத்தனமாக சுழற்றிய வீரர்.. அடுத்து நடந்த விபரீதம்
அமெச்சூர் அளவிலான கிரிக்கெட் போட்டியின்போது ரன் அவுட் ஆன வீரர் செய்த செயல் விபரீதமாகிவிட்டது.
விளையாட்டு போட்டியில் வெற்றி தோல்வி என்பது சகஜம்தான் என்றாலும், தோல்வியடைய நேரிட்டால் அந்த வீரரின் முகம் சட்டென இறுக்கமாகிவிடுகிறது. இந்த அதிருப்தி சில சமயங்களில் ஆக்ரோஷமாக வெளிப்பட்டு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், அமெச்சூர் அளவிலான கிரிக்கெட் போட்டியின்போது ரன் அவுட் ஆன வீரர் செய்த செயல் விபரீதமானதை காண முடிகிறது.
அந்த வீடியோவில் ஒரு வீரர் ரன் அவுட் ஆகி ஆடுகளத்தை விட்டு வெளியேறுவதைக் காணலாம். ஆனால் விரக்தியில் அவர் தனது மட்டையை காட்டுத்தனமாக சுழற்றுகிறார். அப்போது அவரது பிடியில் இருந்து பறந்த பேட், எதிர்பாராத வகையில் அவருடன் ஆடிய சக வீரரை பலமாக தாக்கியது. இதைப் பார்த்த எதிரணி வீரர்கள் திகைத்து நின்றனர்.
Related Tags :
Next Story