முதல் இன்னிங்சில் இந்த ஸ்கோரை தாண்டிவிடுங்கள் - இந்திய அணிக்கு சுனில் கவாஸ்கர் அறிவுரை


முதல் இன்னிங்சில் இந்த ஸ்கோரை தாண்டிவிடுங்கள் - இந்திய அணிக்கு சுனில் கவாஸ்கர் அறிவுரை
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 9 Jun 2023 12:41 PM IST (Updated: 9 Jun 2023 12:46 PM IST)
t-max-icont-min-icon

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதி வருகின்றன.

லண்டன்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரோலியா மோதுகின்றன. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரன்கள் குவித்துள்ளது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா தடுமாறி வருகிறது. 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 29 ரன்களுடனும், பரத் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா ஆஸ்திரேலியாவை விட 318 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்திய அணி குறைந்தபட்சம் இந்த ஸ்கோரை தாண்டிவிட வேண்டும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

2001-ம் ஆண்டு ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமணனின் மிகப்பெரிய கூட்டணியை ஆஸ்திரேலிய வீரர்கள் பார்த்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து 2 நாட்கள் பேட்டிங் செய்தனர். பின்னர் கடைசி நாளில் ஆஸ்திரேலியாவின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது. தொடர்ந்து கடைசி டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றிபெற்றது.

ஆட்டத்தின் கடைசி நாளில் பந்தில் சுழற்றி அதிகமாக இருக்கலாம். ஜடேஜா சில அற்புதங்களை நிகழ்த்தலாம். ஆகையால், இந்தியா முதலில் முதல் இன்னிங்சில் 269 ரன்களை தாண்டி ஆஸ்திரேலியாவிடமிருந்து பின் தங்கியுள்ள ரன் அளவை குறைக்க வேண்டும்' என்றார்.


Next Story