பேட்டிங் ஆடுவது மிகவும் சுலபம் என்று சூர்யகுமார் கூறுகிறார் - ஹர்திக் பாண்ட்யா புகழாரம்


பேட்டிங் ஆடுவது மிகவும் சுலபம் என்று சூர்யகுமார் கூறுகிறார் - ஹர்திக் பாண்ட்யா புகழாரம்
x

பேட்டிங் ஆடுவது மிகவும் சுலபம் என்று சூர்யகுமார் கூறியதாக ஹர்திக் பாண்டியா புகழ்ந்துள்ளார்.

ராஜ்கோட்,

இந்தியா - இலங்கை இடையேயான கடைசி, 3வது டி20 போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கையை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இப்போட்டியில் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 51 பந்துகளில் 112 ரன்கள் குவித்த சூர்யகுமார் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போட்டியின் வெற்றிக்கு பின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் பேட்டிங்கின் போது சூர்யகுமார் அனைவரையும் ஆச்சரியப்படவைக்கிறார். பேட்டிங் மிகவும் சுலபம் என்று சூர்யகுமார் எங்களிடம் கூறுகிறார். நான் அவருக்கு பந்து வீசினால், அவரின் பேட்டிங் மற்றும் அவர் அடிக்கும் ஷார்ட்களை பார்த்தால் என் மனம் உடைந்துவிடும்' என்றார்.


Next Story