ஹென்ரிச் கிளாசன் அசத்தல் சதம்..! ஐதராபாத் 186 ரன்கள் குவிப்பு
ஹென்ரிச் கிளாசென் 49 பந்துகளில் சதம் அடித்தார்
ஐதராபாத்,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா , ராகுல் திரிபாதி களமிறங்கினர். அபிஷேக் ஷர்மா 11ரன்கள் , ராகுல் திரிபாதி 15ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஹென்ரிச் கிளாசென், மார்க்ரம் இருவரும் இனைந்து சிறப்பாக ஆடினர். குறிப்பாக ஹென்ரிச் கிளாசென் அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரைசதம் அடித்தார்.
மறுபுறம் மார்க்ரம் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹார்ரி புரூக் கிளாசெனுடன் இனைந்து சிறப்பாக ஆடினார்.
தொடர்ந்து அதிரடி;காட்டிய கிளாசென் பெங்களூரு பந்துவீச்சை நாலுபுறமும் சிதறடித்தார்.அவர் 49பந்துகளில் சதம் அடித்தார்,
இறுதியில் 20 ஓவர்களுக்கு ஐதராபாத்5விக்கெட் இழப்பிற்கு 186ரன்கள் எடுத்தது. தொடர்நது187 ரன்கள் இலக்குடன் பெங்களுரு விளையாடுகிறது.