பாராட்டு ராகுல் டிராவிட்டிற்கே சேரும்; நான் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன் - தினேஷ் கார்த்திக்


பாராட்டு ராகுல் டிராவிட்டிற்கே சேரும்; நான் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன் - தினேஷ் கார்த்திக்
x

இந்த அமைப்பில் நான் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

ராஜ்கோட்,

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் 82 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் 27 பந்துகளில் 55 ரன்கள் குவித்த தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

போட்டிக்கு பின் வர்ணனையாளரின் கேள்விகளுகு பதிலளித்து பேசிய தினேஷ் கார்த்திக், நான் தற்போது சிறப்பாக உணருகிறேன். இந்த அமைப்பில் நான் மிகவும் பாதுகாப்பாக உணருகிறேன். கடந்த போட்டியின்போது அனைத்தும் திட்டமிடப்பட்டி செல்லவில்லை. ஆனால், இன்று நான் என் திறனை வெளிப்படுத்த திட்டமிட்டிருந்தேன். இந்த பாராட்டு ராகுல் டிராவிட்டிற்கு சேரும். அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. வீரர்கள் அறை தற்போதும் மிகவும் அமைதியாக உள்ளது. அமைதியாகவும், பாதுகாப்பாகவும் உணருகிறேண். இந்த தெளிவு மற்றும் அமைதி எனக்கு உதவியுள்ளது' என்றார்.


Next Story