'யார் என்ன கூறினாலும் எனக்கு கவலையில்லை' - விராட் கோலி
‘யார் என்ன கூறினாலும் எனக்கு கவலையில்லை’ என விராட் கோலி கூறியுள்ளார்.
ஐதராபாத்,
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் பெங்களூரு அணியின் விராட் கோலி 63 பந்துகளில் 100 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். மேலும், இப்போட்டியில் சிறப்பாக ஆடிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
போட்டிக்கு பின் நடப்பு ஐபிஎல் தொடரில் உங்கள் ஸ்டிரைக் ரேட் சற்று குறைவாக உள்ளதே அது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று விராட் கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த விராட் கோலி, கடந்த கால ரன்கள் குறித்து நான் திரும்பி பார்ப்பதில்லை. நான் ஏற்கனவே என்னை நிறைய மன அழுத்தத்திற்கு உட்படுத்தியுள்ளேன். சிறப்பான ஆட்டங்கள் விளையாடியபோது சில நேரங்களில் எனக்கு நான் மதிப்பு கொடுப்பதில்லை. ஆகையால், வெளியில் யார் என்ன கூறினாலும் அதுபற்றி எனக்கு கவலையில்லை. ஏனென்றால் அது அவர்களின் கருத்து' என்றார்.