டிம் டேவிட் அடித்தபோது பேட் பந்தில் உரசியதாக நான் உணர்ந்தேன்.... ஆனால்? - ரீவ்யூ எடுக்காதது குறித்து ரிஷப் அதிர்ச்சி தகவல்


டிம் டேவிட் அடித்தபோது பேட் பந்தில் உரசியதாக நான் உணர்ந்தேன்.... ஆனால்? - ரீவ்யூ எடுக்காதது குறித்து ரிஷப் அதிர்ச்சி தகவல்
x

டிம் டேவிட் தான் சந்தித்த முதல் பந்திலேயே கீப்பர் ரிஷப் பண்ட் இடம் கேட்ச் கொடுத்தார். ஆனால், நடுவர் அந்த கேட்ச்சிற்கு அவுட் கொடுக்கவில்லை.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் டெல்லி அணி களமிறங்கியது.

போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழந்து 19.1 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது. மும்பையின் இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்குள் செல்லும் வாய்ப்பை தவற விட்டது.

இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய டெல்லி வீரர் டிம் டேவிட் 11 பந்தில் 34 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அதேவேளை, டிம் டேவிட் களமிறங்கிய முதல் பந்தில் பேட்டில் பந்து உசரி கீப்பர் ரிஷப் பண்ட் கேட்ச் பிடித்தார். ஆனால், அதற்கு நடுவர் அவுட் கொடுக்கவில்லை. பந்துவீச்சாளார் கேப்டன் ரிஷப் பண்ட் இடம் இதை ரீவ்யூ செய்யும்படி கேட்டார். ஆனால், கேப்டன் ரிஷப் பண்ட் ரீவ்யூ செய்யவில்லை. ஆட்டத்தின் போக்கை மாற்றிய முக்கியமான நிகழ்வுகாக அது கருதப்படுகிறது. 2 ரீவ்யூக்கள் எஞ்சி இருந்தபோதும் கேப்டன் ரிஷி பண்ட் ரீவ்யூ கேட்காதது ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது. டெல்லி அணியின் தோல்விக்கு அது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில், தோல்வி குறித்தும், 2 ரீவ்யூக்கள் எஞ்சி இருந்தபோதும் டிம் டேவிட்டிற்கு எதிராக ரீவ்யூ எடுக்காதது குறித்து டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இடம் போட்டி முடிந்த பின் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரிஷப் பண்ட், டிம் டேவிட் அடித்த போது பேட் பந்தில் உரசியதாக நான் உணர்ந்தேன். ஆனால், மைதானத்தின் உள்வட்ட பகுதியில் இருந்த வீரர்கள் அனைவரும் பேட் பந்தில் உரசவில்லை என நினைத்தனர். அதனால், நாம் ரீவ்யூ எடுப்போமா? என்று கேட்டேன். ஆனால், இறுதியில் நான் ரீவ்யூ எடுக்கவில்லை' என்றார்.


Next Story