இதற்காகவே எனது பெரும்பாலான கார்களை விற்றேன்... நேர்க்காணல் ஒன்றில் மனம்திறந்த விராட் கோலி
கிரிக்கெட்டில் எல்லா காலத்திலும் சிறந்தவர்கள் என இரண்டு ஜாம்பவான்களின் பெயரை விராட் கோலி கூறினார்.
பெங்களூரு,
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்பிசி) நட்சத்திர வீரர் விராட் கோலி, பல ஆண்டுகளாக தான் வாங்கிய பெரும்பாலான கார்களை விற்றதாகக் கூறினார். இதுகுறித்து ஆர்சிபி நடத்திய நேர்க்காணல் ஒன்றில் அவர் கூறியதாவது;
நான் சொந்தமாக பல கார்களை வைத்திருந்தேன். அந்த கார்களில் பெரும்பாலானவைள் மனதின் தூண்டுதலால் வாங்கப்பட்டவை. நான் அவற்றை ஓட்டவோ அல்லது பயணிக்கவோ சிரமப்பட்டேன்.
ஒரு கட்டத்திற்கு பிறகு, இது தேவையற்றது என்று நான் உணர்ந்தேன். இப்போது நாம் எதைப் பயன்படுத்துகிறோம். எங்களுக்கு முற்றிலும் தேவை, இது நடைமுறைக்குரியது என்பது தவிற பெரும்பாலான கார்களை விற்றுவிட்டேன்.
கிரிக்கெட்டில் எல்லா காலத்திலும் சிறந்தவர் யார் என்ற கேள்விக்கு அவர் கூறும்போது, நான் கருதும் இரண்டு பேட்ஸ்மேன்கள் கிரிக்கெட்டின் இயக்கவியலை முழுவதுமாக மாற்றியவர்கள். அவர்களில் ஒருவர் சச்சின் டெண்டுல்கள். மற்றொருவர் சர் விவ் ரிச்சர்ட்ஸ். சச்சின் எனது ஹீரோ. இவர்கள் இருவரும் தங்கள் தலைமுறையில் பேட்டிங்கில் புரட்சியை ஏற்படுத்தி, கிரிக்கெட்டின் இயக்கத்தை முற்றிலுமாக மாற்றியிருக்கிறார்கள். என்று கோலி கூறினார்.
ஓய்வு பெற்ற டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் மற்றும் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இருவருடன் நீங்கள் இருக்கும்போது என்ன பேசுவீர்கள் என கேட்டதற்கு, அவர்கள் இருவரும் பேசுவதை தான் கேட்பேன் என்று கோலி கூறினார்.
நான் அமைதியாக இருவரது உரையாடலையும் கேட்பேன். அவர்களுடன் நானும் பேச என்னிடம் வார்த்தைகள் இருக்காது. விளையாட்டு வரலாற்றில் இரண்டு சிறந்த விளையாட்டு வீரர்களின் பேச்சை அமைதியாக கேட்கலாம். இவ்வாறு விராட் கோலி கூறினார்.