இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கை
போட்டியில் தாமதமாக பந்துவீசியதாக இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டிரினிடாட்,
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் உள்ளது.
இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 150 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 145 ரன்களே எடுத்தது. இதனால் 4 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் போட்டியில் தாமதமாக பந்துவீசியதாக இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு போட்டி சம்பளத்திலிருந்து 5 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 10 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story