உலகக்கோப்பை தொடருக்கான பாடலை வெளியிட்டது ஐசிசி...!


உலகக்கோப்பை தொடருக்கான பாடலை வெளியிட்டது ஐசிசி...!
x

உலகக்கோப்பை தொடரை பிரபலப்படுத்தும் விதமாக ஐசிசி பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

துபாய்,

50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரை பிரபலப்படுத்தும் விதமாக பாடல் ஒன்றை இன்று ஐசிசி வெளியிட உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அந்த பாடல் தற்போது வெளியானது. இந்த பாடலுக்கு 'தில் ஜாஷ்ன் போலே' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர் ப்ரீதம் இசையமைத்துள்ளார்.

இந்த பாடலில் பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story