ஹர்மன்பிரீத் கவுர் கூடுதலாக முயற்சி செய்திருந்தால் ....ரன் அவுட் குறித்து ஆஸ்திரேலிய வீராங்கனை கருத்து


ஹர்மன்பிரீத் கவுர் கூடுதலாக முயற்சி செய்திருந்தால் ....ரன் அவுட் குறித்து ஆஸ்திரேலிய வீராங்கனை கருத்து
x

ஹர்மன்பிரீத் கவுர் இன்னும் அதிக முயற்சி எடுத்திருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் வீராங்கனை அலிசா ஹீலி கூறியுள்ளார்.

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அரை இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா போராடி தோற்றது. இப்போட்டியில் இந்திய கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் (52 ரன்) ரன்-அவுட் ஆனார். அவரது அவுட் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. அவர் 2வது ரன்னை எடுக்க முயற்சித்தபோது மெதுவாக ஓடியதால் ரன்-அவுட் ஆனார் என சர்ச்சை எழுந்தது. ஹர்மன் பிரீத் கவுர் ரன்-அவுட் ஆன விதம் சிறுபிள்ளைத்தனமானது என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறினார். ஆனால் அதை ஹர்மன் பிரீத் கவுர் மறுத்தார்.

இந்த நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் இன்னும் அதிக முயற்சி எடுத்திருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் வீராங்கனை அலிசா ஹீலி கூறியுள்ளார்.

ரன் அவுட் குறித்து அவர் கூறியதாவது ,

அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று ஹர்மன்ப்ரீத் சொல்லலாம், ஆனால் உங்களுக்குத் தெரியும், ஹர்மன்ப்ரீத் உண்மையாக முயற்சி செய்தால் ஒருவேளை கிரீஸைக் கடந்திருக்கலாம் . என தெரிவித்துள்ளார்.


Next Story