வெஸ்ட் இண்டீஸ் அணியில் சுழற்பந்து வீச்சாளர் கெவின் சின்கிளேர் சேர்ப்பு
இந்த போட்டிக்கான 13 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நாளை (இரவு 7.30 மணி) தொடங்குகிறது.
இந்த போட்டிக்கான 13 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடக்க டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் அசத்தியதால், அதை கருத்தில் கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியில் புதுமுக சுழற்பந்து வீச்சாளர் கெவின் சின்கிளேர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆல்-ரவுண்டர் ரேமன் ரீபெர் நீக்கப்பட்டார்.
23 வயதான சின்கிளேர் ஏற்கனவே 7 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 11 விக்கெட்டும், ஆறு 20 ஓவர் போட்டிகளில் 4 விக்கெட்டும் கைப்பற்றி இருக்கிறார். டெஸ்ட் போட்டியில் விளையாடியதில்லை.
Related Tags :
Next Story