இந்தியா-ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டி: கபில் தேவ் சாதனையை முறியடித்த ஜடேஜா...!


இந்தியா-ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டி: கபில் தேவ் சாதனையை முறியடித்த ஜடேஜா...!
x

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தி ரவீந்திர ஜடேஜா சாதனை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியானது இன்று அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸை விளையாடியது.

இந்தநிலையில், இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா.

அதிகபட்சமாக உஸ்மான் 81 ரன்கள் அடித்தார். பீட்டர் ஹென்ஸ்ஸ்காம் 72 ரன்க்ளுடன் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. ஷமி 4, அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா மொத்தம் 252 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 45 போட்டிகளில் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த சாதனையை படைத்தார். அனில் கும்ப்ளே 55 போட்டிகளில் 250 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனையை படைத்தார். ஹர்பஜன் சிங் 61 போட்டிகளில் இந்த சாதனையை படைத்தார்.

இதற்கு அடுத்ததாக கபில்தேவ் 65 போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது ஜடேஜா 61 போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதன் மூலம் கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வேகமாக 250 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா 5 வது இடத்தை பிடித்துள்ளார்.


Next Story