மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி..!


மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி..!
x

கோப்புபடம்

மேற்கு இந்திய தீவுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

புதுடெல்லி,

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் 2023 இறுதிப் போட்டியில் இந்தியாவின் மோசமான தோல்வி இந்தியா மீது மோசமான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. சுனில் கவாஸ்கர் முதல் ரவி சாஸ்திரி வரை, பல முன்னணி கிரிக்கெட் நிபுணர்கள் இந்தியாவின் மோசமான தோல்வி குறித்து தங்கள் கருத்துக்களை கூறி உள்ளனர்.

இந்த நிலையில், உலக டெஸ்ட் சாமிபியன்ஷிப் 2023-25 தொடருக்கான முதல் டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் உடன் இந்திய அணி தொடங்க உள்ளது. இதற்காக வரும் ஜூலை 12ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ந் தேதி வரை இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இந்திய அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

ஜூலை 12-ந் தேதி முதல் 16-ம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியும், 20-24 ம் தேதி வரை இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

ஜூலை 27, 29,, ஆகஸ்ட் 1-ம் தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது.

ஆகஸ்ட் 3, 6, 8, 12, 13 ஆகிய தேதிகளில் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளது.







Next Story