இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இன்றைய டி20 போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு..?


இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இன்றைய டி20 போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு..?
x
தினத்தந்தி 23 Sep 2022 12:00 PM GMT (Updated: 2022-09-23T17:39:08+05:30)

நாக்பூரில் கடந்தசில நாட்களாக மழை பெய்து வருகிறது.

நாக்பூர்,

இந்திய- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டியானது நாக்பூரில் இன்று இரவு நடைபெற உள்ளது. மொகாலியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

நாக்பூரில் கடந்தசில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும், இரு அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற இருந்த பயிற்சி ஆட்டமும் மழை காரணமாக ரத்துசெய்யப்பட்டது. இதனால், இன்றைய போட்டியில் மழை குறுக்கிடும் என்ற அச்சம் நிலவுகிறது.

வானிலை மையத்தில் அறிவிப்பின் படி, நாக்பூரில் 64 சதவீதம் மேக மூட்டம் கானப்படும் என்றும், வெப்பநிலையானது 29 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும் என்றும் மழையால், ஆட்டம் பெரிதும் பாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story