இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான கடைசி டி20 போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு..!


இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான கடைசி டி20 போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு..!
x

image tweeted by @ICC

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலாக கடைசி டி20 போட்டியானது பெங்களூருவில் இன்று நடைபெற உள்ளது.

பெங்களூரு,

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. இதில் முதல் இரு போட்டியினை தென் ஆப்பிரிக்க அணியும், 3 மற்றும் 4 ஆவது போட்டியினை இந்திய அணியும் வென்றுள்ளன.

இதையடுத்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கு கடைசி போட்டியானது பெங்களூருவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்றைய போட்டியானது மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பெங்களூருவில் இரவு 7 மணியளவில் 99 சதவீத மேகமூட்டத்துடன் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை தகவல்கள் கூறுகின்றன.


மேலும், ஈரப்பதம் 92 சதவீதமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், போட்டியானது மழை இடையூறு இன்றி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Next Story