அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி.! தொடரையும் கைப்பற்றி அசத்தல்


அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி.! தொடரையும் கைப்பற்றி அசத்தல்
x

அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

டப்ளின்,

ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டப்ளினில் நேற்று முன்தினம் இரவு நடந்த மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் கெய்க்வாட் 58 ரன், சாம்சன் 40 ரன், ரிங்கு சிங் 38 ரன், ஷிவம் துபே 22 ரன் எடுத்தனர். இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி ஆடி வருகிறது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் பால் ஸ்டிர்லிங் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். லோர்கர் டக்கர்(0), ஹாரி டெக்டார்(7), சாம்பர்(17) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஆண்ட்ரூ பால்பிர்னி மட்டும் ஒருபுறம் நிலைத்து நின்று விளையாடி ரன்களை திரட்டிக்கொண்டிருந்தார். ஆனால், மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்துகொண்டே இருந்தது.

பால்பிர்னி தன் பங்குக்கு 51 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அத்துடன் அயர்லாந்தின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இறுதியில் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அத்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி வருகிற 23ந்தேதி நடைபெறுகிறது.


Next Story