தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி - முழு அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ...!


தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி - முழு அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ...!
x

Image Courtesy: AFP

இந்திய கிரிக்கெட் அணி வரும் டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி வரும் டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

இந்தியாவில் வரும் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு பின்னர் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணையை இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியங்கள் வெளியிட்டுள்ளன.

அதன்படி தொடரில் முதலாவதாக டி20 போட்டிகள் நடைபெறுகிறது. அதன்பின்னர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள் நடைபெறுகின்றன. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கு இந்த தொடர் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

போட்டி அட்டவணை விவரம்:

டி20 தொடர்:-

முதல் டி20 போட்டி - டிசம்பர் 10 - டர்பன்

2வது டி20 போட்டி - டிசம்பர் 12 - க்கெபெர்ஹா

3வது டி20 போட்டி - டிசம்பர் 14 - ஜோகன்னஸ்பர்க்

ஒருநாள் தொடர்:-

முதல் ஒருநாள் போட்டி - டிசம்பர் 17 - ஜோகன்னஸ்பர்க்

2வது ஒருநாள் போட்டி - டிசம்பர் 19 - க்கெபெர்ஹா

3வது ஒருநாள் போட்டி - டிசம்பர் 21 - பார்ல்

டெஸ்ட் தொடர்ட்:-

முதல் டெஸ்ட் - டிசம்பர் 26-30 - செஞ்சுரியன்

2வது டெஸ்ட் - ஜனவர் 3-7 - கேப்டவுன்




Next Story