ஐபிஎல் 2023 - காயம் காரணமாக தொடரிலிருந்து பும்ரா விலகல் ?


ஐபிஎல் 2023 - காயம் காரணமாக தொடரிலிருந்து பும்ரா விலகல் ?
x

காயம் காரணமாக அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

பெங்களூரு,

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா, எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனை முழுவதும் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக கடந்த ஆண்டு நடந்த பல்வேறு தொடர்களில் பங்கேற்கவில்லை. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அந்த தொடரிலிருந்து விலகினார்.

இந்த நிலையில் வரும் மார்ச் 31-ம் தேதி தொடங்கும் 16-வது ஐபிஎல் சீசனில் ஜஸ்ப்ரித் பும்ரா பங்கேற்கமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து வரும் ஜூன் மாதம் லண்டனில் நடக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் பும்ரா விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.

முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும் எனத் தெரிகிறது.


Related Tags :
Next Story