ஐபிஎல் 2023 : சென்னை அணியிலிருந்து முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகல்..! மாற்று வீரர் அறிவிப்பு
கடந்த சீசனில் சென்னை அணிக்காக சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்துவீச்சாளர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன .இந்த போட்டிக்காக அணைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சீசனில் சென்னை அணிக்காக சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சவுத்ரி, காயம் காரணமாக விலகியுள்ளார்.
கடந்த 2022 ஐபிஎல் சீசனில் முகேஷ் சவுத்ரி, முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். இந்த நிலையில் அவர் காயம் காரணமாக விலகியிருப்பது சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இதையடுத்து இவருக்கு பதிலாக நாகலாந்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங்கை மாற்று வீரராக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.
LION ALERT: Akash Singh joins the squad ahead of IPL 2023. #WhistlePodu #Yellove
— Chennai Super Kings (@ChennaiIPL) March 30, 2023