ஐபிஎல் 2023 : மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ரிஷப் பண்ட் ..! ரசிகர்கள் உற்சாகம்


ஐபிஎல் 2023 : மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ரிஷப் பண்ட் ..!  ரசிகர்கள் உற்சாகம்
x

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 7-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சும், குஜராத் டைட்டன்சும் மோதுகின்றன

புதுடெல்லி,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 7-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சும், குஜராத் டைட்டன்சும் மோதுகின்றன

. டெல்லி அணி தனது தொடக்க ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவிடம் பணிந்ததுதற்போது சொந்த ஊரில் நடப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். இந்நிலையில் டெல்லி - குஜராத் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி வீரர்களை உற்சாகப்படுத்த விபத்தில் காயமடைந்து ஓய்வில் இருக்கும், ரிஷப் பண்ட் நேரில் வரவுள்ளார். விபத்துக்கு பிறகு முதல் முறையாக அவர் வருவதால் டெல்லி ரசிகர்கள் அவரது வருகையை எதிர்நோக்கி உள்ளனர்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டி.வி. சேனலிலும், ஜியோ சினிமா செயலியிலும் நேரடியாக பார்க்கலாம்.


Next Story