நள்ளிரவு முதல் வரிசையில் காத்திருந்து...அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்த ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட்...!


நள்ளிரவு முதல் வரிசையில் காத்திருந்து...அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்த ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட்...!
x
தினத்தந்தி 27 March 2023 5:34 PM IST (Updated: 27 March 2023 5:44 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நடக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய உடனே அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் நடந்து வரும் ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் 31 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இதில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன். இதைத் தொடர்ந்து சென்னை அணிக்கான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி நடக்கிறது.

இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக சென்னையில் ஐபிஎல் திருவிழா நடத்தப்படவில்லை. அந்த வகையில் 3ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் வரும் 3ஆம் தேதி ஐபிஎல் போட்டி நடக்கிறது.

இந்தப் போட்டிக்கான கவுண்டர் டிக்கெட் விற்பனை தொடங்கியது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய நிலையில், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 2 கவுன்டர்கள் அமைக்கப்பட்டது. கவுண்டர்கள் திறக்கப்பட்டவுடன் சுமார் அரை மணி நேரத்தில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது. இதற்கான நள்ளிரவு முதலே ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து டிக்கெட்டுகள் வாங்கிச் சென்றனர். கேலரி வாரியாக டிக்கெட் விலை மாறுபடுகிறது.

டிக்கெட் கட்டணம்:

கேலரி சி/டி/இ லோவர் - நேரடி விற்பனை - ரூபாய் 1,500.

கேலரி ஐ/ஜே/கே அப்பர் - நேரடி மற்றும் ஆன்லைன் விற்பனை - ரூபாய் 2,000.

கேலரி ஐ/ஜே/கே லோவர் - நேரடி மற்றும் ஆன்லைன் விற்பனை - ரூபாய் 2,500.

கேலரி டி/ஈ அப்பர் - ஆன்லைன் விற்பனை - ரூபாய் 3,000.

சென்னையில் நடக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டிகள்:

ஏப்ரல் 3 - சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், இரவு 7:30 மணி

ஏப்ரல் 12 - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ், இரவு 7:30 மணி

ஏப்ரல் 21 - சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத், இரவு 7:30 மணி

ஏப்ரல் 30 - சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ், பிற்பகல் 3:30 மணி

மே 6 - சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ், பிற்பகல் 3:30 மணி

மே 10 - சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ், இரவு 7:30 மணி

மே 14 - சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், இரவு 7:30 மணி


Related Tags :
Next Story