ஐபிஎல் இறுதிப்போட்டி : மழையால் டாஸ் போடுவதில் தாமதம்..!
அகமதாபாத்தில் மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அகமதாபாத்,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அகமதாபாத்தில் மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மழை இன்று தொடர்ந்து பெய்தால் 'ரிசர்வ் டே' முறையில் போட்டி நாளை நடத்தப்படும்
Related Tags :
Next Story